உயிரினங்களுக்கு அறிவியல் பெயர்கள் வைக்கப்படுவதன் காரணம், தாவர பொதுப்பெயர்களின் குறைபாடுகள், உயிரினங்களின் பொதுப்பெயர் பிரச்சனைகள்,அறிவியல் பெயர்களின் முக்கியத்துவம், உயிரியல் பெயர்களின் தேவை,அறிவியல் பெயர்களின் தேவை, தாவர அறிவியல் பெயர்கள், தாவர பொதுப்பெயர்கள், உயிரிகளின் பொதுப்பெயர் தாவர வட்டாரப்பெயர்கள், இருசொல் பெயர், ,இலத்தின் பெயர்கள்,தாவரப்பெயர்கள்.
இவ்வுலகில் காணும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களை அடையாளம் காண்பதற்காக மனிதர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பெயர்கள் தான் பொதுப்பெயர்கள் எடுத்துக்காட்டாக தமிழில் தக்காளி பூனை ஆங்கிலத்தில் Mango,Lion போன்றவை
அறிவியல்உலகம் இத்தகைய பொதுப்பெயர்களுக்கு மாற்றாக அறிவியல் பெயர்களை பயன்படுத்துகிறது. அதற்கு முக்கியக் காரணம் பொதுப்பெயர் முறையில் பல்வேறு விதமான குறைபாடுகள் காணப்படுகின்றன.
உலகில் பல நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன இதில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு விதமான பெயர்கள் வைக்கப்படுகின்றன.இவை அனைத்தையும் கற்று நினைவில் வைத்துக்கொள்வது என்பது அறிவியல் பெயரைக் கற்பதைக் காட்டிலும் மிகமிகக் கடினம்.
சில உயிரினங்களின் பெயர்கள் ஒரு மொழியிலேயே அம்மொழி பேசப்படும் பல வட்டாரங்களிலும் பல்வேறு விதமான பெயர்களில் அழைக்கப்படுகின்றன எடுத்துக்காட்டாக புரோசாபிஸ் ஜூலிபுளோரா(Prosopis juliflora) என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இத்தாவரம் தமிழ் மொழியில் அம்மொழி பேசப்படும் பல வட்டாரங்களில் வெவ்வேறு பெயர்களால் அறியப்படுகின்றன
பொதுப்பெயர் முறையில் காணப்படும் இத்தகைய குறைபாடுகள் மற்றும் இன்ன பிற காரணங்களால் தான் உயிரினங்களுக்கு அறிவியல் பெயர் அதாவது இருசொல் பெயர் சூட்டப்படவேண்டியது அவசியமாயிற்று.
0 Comments